1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 17 நவம்பர் 2023 (10:50 IST)

பழனி தண்டாயுதபாணி திருக்கோவில் தீபத்திருவிழா! – கொடியேற்றத்திற்கு தயாராகும் பக்தர்கள்!

அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலில் தீபத்திருவிழாவுக்கான கொடியேற்றத்திற்கு ஏற்பாடுகள் ஆகி வருகிறது.



நவம்பர் 26ம் தேதி கார்த்திகை பண்டிகை தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான கோவணாண்டியாய் முருகன் காட்சி தரும் பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலில் கார்த்திகை விழா 6 நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. ஆறுமுகனின் சிறப்பான 6 தோற்ற தரிசனத்தை போற்றும் வகையில் இந்த 6 நாள் தீபவிழா நடைபெறுகிறது.

இதற்கான கொடியேற்றம் 20ம் தேதி திங்கள் அன்று பழனியில் நடைபெறுகிறது. அன்று காலை 5:30 மணிக்கு சாயரட்ச பூஜை நடத்தப்பட்டு மலைக்கோவிலில் காப்பு கட்டப்படும். மாலை 6 மணிக்கு சண்முகார்ச்சனையும், 6.30 மணிக்கு சண்முகர் தீப ஆராதனையும், 7 மணிக்கு தீபாராதனை மற்றும் தங்கரத புறப்பாடும் நடைபெறும்.

தொடர்ந்து 6 நாட்களும் இந்த பூஜை நடத்தப்பட்டு சிகர நிகழ்வாக 25ம் தேதி பரணி தீபம் ஏற்றுதல் நிகழ்ச்சி நடைபெறும். 26ம் தேதி திருக்கார்த்திகை தீபம் மற்றும் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வும் நடைபெற உள்ளது.

அன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடைபெறும். இதனால் பழனி ஆண்டவர் கோவில் கார்த்திகை திருவிழாவிற்கு ஏராளமான பக்தர்கள் வர உள்ள நிலையில் முன் ஏற்படுகளும் வேகமாய் நடந்து வருகின்றது.

Edit by Prasanth.K