திங்கள், 25 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. செய்திகள்
Written By

ஆடி 18; ஆடிப்பெருக்கு விழா உற்சாக கொண்டாட்டம்

தமிழ் மாதம் ஆடி 18ல் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. தமிழர்களின் முக்கிய திருவிழாக்களில் இதுவும் ஒன்று. காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், மேலும் அனைவரது வாழ்விலும் காவிரி போல் மகிழ்ச்சியும் வளமும் பொங்கி வாழவேண்டும் என்று காவிரிக்கு படையிலிட்டு வழிபாடு செய்வது வழக்கம்.
ஆடிப்பெருக்கு விழா இன்று தமிழகத்தில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் ஆடிபெருக்கு விழா  களைகட்டியது. திருவையாறு புஷ்ய படித்துறையில் இன்று காலை முதலே ஏராளமான பெண்கள் புனித நீராடி, படித்துறையில்  பூஜை செய்து  வழிபட்டனர்.
 
திருவையாறு புஷ்ய மண்டபத்துறை காவிரி ஆற்றில் புதுமணத் தம்பதிகள், மற்றும் திருமணமான பெண்கள், திருமண மாகாத கன்னிப்பெண்கள் அனைவரும் வழிபாடு செய்யப்பட்ட மஞ்சள் கயிற்றை ஒருவருக் கொருவர் கழுத்தில் அணிவித்தனர். புதுமண தம்பதிகள் காவிரியில் பினித நீராடி புத்தாடை அணிந்து  காவிரி ஆற்றில் மலர்களை தூவி வழிபட்டனர்.
 
காவிரியில் தண்ணீர் அதிகளவில் செல்வதால், போலீசார் தடுப்புகளை அமைத்து பக்தர்களை பாதுகாப்பாக குளிக்க அனுமதித்தனர். மேலும் படித்துறைகளில்  ஆழமான பகுதி என்று எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டு இருந்தன. 
 
மயிலாடுதுறை, துலா கட்டம், சீர்காழி, திருவாரூர், கும்பகோணம் பக்வத் படித்துறை, பாலக்கரை, திருக்காட்டுப் பள்ளி மற்றும் திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா  மண்டபம் படித்துறை ஆகிய இடங்களில் ஆடிப்பெருக்கு விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
 
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் தொடங்கி காவிரி கரை நெடுக புனித நீராடி மக்கள் ஆடிப்பெருக்கு விழவை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். மேட்டூர் காவிரி ஆற்றிற்கு பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர். அவர்கள் அங்குள்ள காவிரியில் புனித நீராடினர். 
 
சேலம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் மேட்டூர் காவிரி ஆற்றில் காலை முதலே அதிக அளவில் பக்தர்கள் கூட்டம்  காணப்பட்டது.