வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 19 அக்டோபர் 2023 (18:22 IST)

ஆயுத பூஜை சிறப்பு பேருந்துகள்.. முழு விவரங்கள் வெளியீடு

வரும் திங்கள் செவ்வாய் ஆகிய இரண்டு நாட்கள் ஆயுத பூஜை விடுமுறை வருகிறது என்பதும் அதற்கு முன்பு சனி ஞாயிறு இரண்டு தினங்கள் விடுமுறை என்பதால் சொந்த ஊரு செல்பவர்கள்  வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என ஏற்கனவே தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை தெரிவித்துக் கொண்டது.
 
இந்த நிலையில் இது குறித்த முழு விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன.   திண்டிவனம் வழியாக  செஞ்சி, நெய்வேலி, கடலூர், சிதம்பரம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் சிறப்பு பேருந்துகள் தாம்பரம் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்படும். 
 
அதேபோல் வேலூர், திருப்பத்தூர், காஞ்சிபுரம், திருத்தணி, திருப்பதி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் சிறப்பு பேருந்துகள் பூந்தமல்லி பைபாஸ் அருகே உள்ள பேருந்து நிலையத்தில் நிறுத்தப்படும். 
 
மதுரை நெல்லை உள்பட மற்ற அனைத்து பகுதிகளுக்கும் செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும் அக்டோபர் 20 முதல் 22ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் இந்த சிறப்பு பேருந்துகளின் அட்டவணைகளை இணையதளத்தில் தெரிந்து கொண்டு அதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு பயணிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
 
 
Edited by Mahendran