புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 19 அக்டோபர் 2021 (07:48 IST)

ஹிந்தி கற்றுக் கொள்ளாமல் ஏன் இருக்கிறீர்கள்? வாடிக்கையாளர்களிடம் கேள்வி கேட்ட ஜொமைட்டோ!

தமிழகத்தைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவரிடம் இந்தியாவின் தேசிய மொழியான இந்தியை கற்றுக் கொள்ளாமல் ஏன் இருக்கிறீர்கள் என்ற கேள்வி கேட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
மதுரையைச் சேர்ந்த ஒருவர் உணவு டெலிவரி வழங்கும் நிறுவனமான ஜொமைட்டோவிடம் ஆர்டர் செய்த உணவில் பாதிக்குமேல் வரவில்லை என்று புகார் செய்தார் 
 
மேலும் அவர் கஸ்டமர் கேரை தொடர்பு கொண்டபோது உங்களுக்கு பிரச்சினையை விளக்க இந்தியில் விளக்கத் தெரியவில்லை இந்தியாவில் இருந்துகொண்டு தேசிய மொழியான ஹிந்தி தெரியாமல் ஏன் இருக்கிறீர்கள்? அதனால் உங்களுக்கு பணம் திரும்பக் கிடைக்காது என கூறியதாக தெரிகிறது.
 
இதனை அந்த நபர் தனது டுவிட்டரில் இதுகுறித்து பதிவு செய்துள்ள நிலையில் ஜொமைட்டோ நிறுவனத்திற்கு எதிராக பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தர்மபுரி எம்பி செந்தில்குமார் கூறியதாவது:  ஹிந்தி தேசிய மொழி என்று யார் சொன்னது? தமிழகத்தில் உள்ளவர்கள் எதற்காக இந்தியை கற்றுக்கொள்ள வேண்டு?ம் இதற்காக உடனடியாக சம்பந்தப்பட்ட நிறுவனம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது