1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 11 அக்டோபர் 2021 (19:21 IST)

ஆன்லைன் ரம்மி: ஐடியில் பணிபுரியும் இளைஞர் தூக்கில் தொங்கி தற்கொலை

ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பல இளைஞர்கள் லட்சக்கணக்கான பணத்தை இழந்து தற்கொலை செய்து வருகிறார்கள் என்ற செய்தியை அவ்வப்போது பார்த்து வருகிறோம். அந்த வகையில் சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞர் ஒருவர் ஆன்லைன் ரம்மியால் லட்சக்கணக்கான பணத்தை இழந்ததை அடுத்து அவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது
 
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி என்ற பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர் சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவர் தனக்கு வரும் சம்பளம் முழுவதையும் ஆன்லைன் ரம்மியில் விளையாடி லட்சக்கணக்கில் பணத்தை இழந்து விட்டதாகவும் இதனால் வீட்டுக்கு பணம் அனுப்பவில்லை என்றும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊர் வந்த ஆனந்தனிடம் அவரது பெற்றோர் ஆன்லைன் ரம்மி விளையாட கூடாது என்ற கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த ஆனந்தன் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அந்த
 பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.