1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 17 ஜனவரி 2017 (20:26 IST)

மின்சாரம் துண்டிக்கப்பட்டும் செல்போன் டார்ச் அடித்து போராடும் இளைஞர்கள்!

சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு ஆதரவாக போராடிய இளைஞர்கள் மாலை மின்சாரம் துண்டிக்கப்பட்டபோதும், தங்களது செல்போனில் உள்ள டார்ச்சுகளில் விளக்கையேற்றி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


 

அலங்காநல்லூரில் கிராம மக்கள் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதேபோல் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும் அலங்காநல்லூரில் இளைஞர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் சென்னை மெரினா கடற்கரை அருகே பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே இன்று மாலையில் மெரினா கடற்கரை பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஆனால், அதற்கும் அசராத இளைஞர்கள், தங்களிடம் உள்ள செல்போன் டார்ச் வெளிச்சத்தில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடற்கரை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.