ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 19 ஜூன் 2022 (12:09 IST)

அக்னிபாத் விவகாரம்: மீண்டும் இளைஞர்கள் மெரீனாவில் கூடுகிறார்களா?

marina
சமீபத்தில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய அக்னிபாத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டம் ஒரு சில இடங்களில் வன்முறையாக வெடித்து ரயில்களுக்கு தீ வைக்கும் அளவுக்கு பதட்ட நிலையை ஏற்படுத்தி உள்ளது
 
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சென்னையிலும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது என்பதும் ஆங்காங்கே போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சென்னை மெரினாவில் இளைஞர்கள் கூடி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்போவதாக செய்தி வெளியானதை அடுத்து மெரினாவுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது என காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார் 
 
கடந்த சில வருடங்களுக்கு முன் சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டம் பிரம்மாண்டமாக நடந்தது என்பதும் இந்த போராட்டம் காரணமாக ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது