செவ்வாய், 25 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Modified: சனி, 6 ஆகஸ்ட் 2016 (19:21 IST)

நடுரோட்டில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த வாலிபர்: விஷம் குடித்த மாணவி

சேலம் மாவட்டத்தில் வாலிபர் ஒருவர் பிளஸ்-1 படிக்கும் மாணவிக்கு நடுரோட்டில் வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததால், மாணவி விஷம் அருந்தி தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார்.


 

 
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள பூக்காரவட்டம் பகுதியை சேர்ந்த ராதா(17), அரசு உயர்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.
 
செட்டிக் கரனூர் பகுதியை சேர்ந்த விசைத்தறி தொழிலாளியான சந்தீப்(26) என்பவன் ராதா பள்ளிக்கு செல்லும்போது, வீடு திரும்பும்போதும், பின்தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தொந்தரவு செய்து வந்துள்ளான்.
 
கடந்த 3ஆம் தேதி ராதா பள்ளி முடித்துவிட்டு தோழிகளுடன் வீடு திரும்பியுள்ளார். அப்போது சந்தீப் வழக்கம் போல் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளான். அதற்கு ராதா மறுப்பு தெரிவித்ததால், சந்தீப் நடுரோட்டில் வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளான்.
 
இதில் மனம் உடைந்த ராதா வீட்டில் விஷம் அருந்தி மயங்கியுள்ளார். உடனே வீட்டில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்து, அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
காவல் துறையினர் சந்தீப் மீது வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்துள்ளனர்.