1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Modified: வெள்ளி, 10 ஜூன் 2016 (17:03 IST)

சென்னை டாஸ்மாக் பாரில் மது அருந்திய வாலிபர் திடீர் மரணம்

சென்னையில் டாஸ்மாக் பாரில் மது அருந்திய வாலிபர் திடீரென்று மயங்கி விழுந்து மரணமடைந்தார். 


 

 
சென்னையில் கொடுங்கையூரைச் சேர்ந்த மணிகண்டன்(30) பெயிண்டராக பணி புரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களுடன் கொடுங்கையூர் முத்தமிழ் நகரைச் சேர்ந்த டாஸ்மாகில் மது அருந்தியுள்ளார். மது அருந்திக் கொண்டிருக்கும் போது திடீரென்று மயங்கி விழுந்துள்ளார். உடனே அவரது நண்பர்கள் அச்சத்தில் அந்த இடத்தை விட்டு  ஓட்டம் பிடித்தனர். 
 
பாரில் அருகில் இருந்தவர்கள் மணிகண்டனை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். மருத்துவமனையில் அவர் இறந்து வெகு நேரமாகிவிட்டது என்று மருத்துவர் கூறியுள்ளார்.
 
இதைத்தொடர்ந்து காவல் துறையினர் இந்த மர்ம சாவுக்கு காரணம் அவரது தொடர் குடி பழக்கமா அல்ல வேறு எது காரணம் உள்ளதா என்று அவரது நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.