திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Modified: ஞாயிறு, 26 ஜூன் 2016 (01:18 IST)

அதிகாலையில் மது குடிக்க சென்ற இளைஞர் ரயில் மோதி பலி

புதுச்சேரி அருகே அதிகாலையில் மது குடிக்க சென்ற இளைஞர், ரயில் தண்டவாளம் வழியே சென்ற போது ரயில் மோதி உயிரிழந்தார்.

 

 
புதுச்சேரி வில்லியனூர் ஒதியம்பட்டு காசி விசுவநாதர் நகரை சேர்ந்தவர் செல்வம்(23) கார் ஓட்டுநராக இருந்துள்ளார். இவர் இன்று அதிகாலை மது குடிக்க அரும்பார்தத்புரம் சாராய கடைக்கு ரயில்வே தண்டவாளம் வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது புதுவையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற ரயில் செல்வம் மீது மோதியது.
 
இதில் செல்வம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து வில்லியனூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.