சாதிக்பாட்ஷா கொலை எப்படி நடந்தது; வாலிபர் வாக்குமூலம் : பரபரப்பு வீடியோ
திமுக முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் நண்பரும், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் தொடர்புடையவராக கருதப்பட்ட சாதிக்பாட்ஷா கொலை செய்யப்பட்டதாக பிரபாகரன் என்ற வாலிபர் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம் வீடியோவாக வெளிவந்துள்ளது.
2ஜி ஊழல் தொடர்பாக, 2011ஆம் ஆண்டு, சாதிக்பாட்ஷாவிடம் சிபிஐ விசாரணை செய்து வந்தது. அந்நிலையில், அவர் திடீரென தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு கொடுத்த நெருக்கடி காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று அப்போது கூறப்பட்டது.
இந்நிலையில் அரியலூர் மாவட்டம், அய்யூரைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் நேற்று திடீரெனெ திருச்சியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.
அதில், ஆ.ராசாவின் மைத்துனர் பரமேஷ்குமார், மற்றும் முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஜாபர்சேட் ஆகியோர் சேர்ந்து சாதிக்பாட்ஷாவை கொலை செய்தாகக் கூறியுள்ளார். தற்போது தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால், ரகசியத்தை வெளியிட்டதாகவும் கூறியுள்ளார்.