1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: திங்கள், 6 நவம்பர் 2017 (17:29 IST)

வீடு புகுந்த கொள்ளையர்களை மடக்கிப் பிடித்த இளம்பெண்...

பட்டப்பகலில் தனது தன்னுடைய வீடு புகுந்து திருடிய கொள்ளையர்களை இளம்பெண் அடித்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
திருப்பூர் பாண்டியன் நகரில் வசிக்கும் செல்வகுமார் என்பவரின் மனைவி கஸ்தூரி(28). இவர் அந்த பகுதியிலுள்ள அம்மா உணவகத்தில் வேலை செய்து வருகிறார். 
 
நேற்று அவர் வேலைக்கு சென்று விட்டு மதியம் 3 மணியளவில் தனது வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதுகண்டு அதிர்ச்சியடைந்த கஸ்தூரி வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது, இரு கொள்ளையர்கள் வீட்டிலிருந்த பீரோவை உடைத்து பணம் மற்றும் நகைகளை திருடிக் கொண்டிருந்தனர். 
 
உடனே சுதாரித்த கஸ்தூரி அங்கிருந்த உருட்டுக்கடையை எடுத்து துணிச்சலுடன் அவர்கள் இருவரையும் சராமாரியாக தாக்கினார். வலி தாங்க முடியாமல் அவர்கள் சத்தம் போட, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அந்த 2 வாலிபர்களையும் அங்குள்ள கம்பத்தில் கட்டி போட்டனர். அதன் பின் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.
 
போலீசார் விரைந்து வந்த அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். விசாரணையில் அந்த 2 வாலிபர்களும் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
 
பட்டப்பகலில் வீடு புகுந்து திருடிய கொள்ளையர்களை துணிச்சலுடன் தாக்கி அவர்களை மடக்கிப்பிடித்த கஸ்தூரியை அந்த பகுதி பொதுமக்களும், போலீசாரும் பாராட்டினர்.