செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 14 பிப்ரவரி 2023 (08:25 IST)

காதலர் தினம்: காதலர்களை தொல்லை செய்தால் கைது நடவடிக்கை? – இளைஞர்கள் மனு!

crime
இன்று காதலர் தினம் கொண்டாடப்படும் நிலையில் காதலர்களை தொந்தரவு செய்பவர்களை கைது செய்ய வேண்டுமென டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பிப்ரவரி 14ம் தேதி உலக காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் காதலர்கள் தங்களுக்குள் பரிசுகளை பரிமாறிக் கொள்வதுடன், நேரில் சந்தித்து தங்கள் காதலையும் பகிர்ந்து கொள்கின்றனர்.

தமிழ்நாட்டிலும் இந்த நாளில் காதலர்கள் பலரும் சந்தித்து கொள்ளும் நிலையில் காதலுக்கு எதிரான குழுவினர் சிலர் காதலர்களை தொல்லை செய்வதும், தாக்குவதும் கடந்த காலங்களில் நிகழ்ந்துள்ளது. இதுபோன்ற தனிமனித சுதந்திர மீறல் செயல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு இளையோர் கூட்டமைப்பு சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் காதலர்களுக்கு எதிராக சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K