நான் ஒத்துக்கிறேன்: மைலாப்பூர் துணை ஆணையர் பதிவு
காவல்துறையினர் வாகனங்களுக்கு தீயிடும் வீடியோ ஏராளமாக உள்ளது என்று ஒருவர் ஃபேஸ்புக்கில் பதிவிட அதற்கு மைலாப்பூர் துணை ஆணையர் நான் உங்கள் கருத்தை ஒத்துக்கிறேன் என்று பதில் பதிவு செய்துள்ளார்.
ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் வாகனங்கள் எரிக்கப்படும் வீடியோ ஒன்றை மைலாப்பூர் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவுக்கு பலர் கருத்துகள் தெரிவித்தனர். அதில் ஒருவர், என்னிடம் காவல்துறையினர் வாகனங்களுக்கு தீயிடும் ஏராளமான வீடியோக்கள் என்னிடம் உள்ளது. இதில் அரசியல் உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.
அதற்கு துணை ஆணையர் பாலகிருஷ்ணன், நான் இதை ஒத்துக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். மெரீனாவில் நடந்த கலவரம் அரசியல் என்று எல்லோரும் அறிந்த ஒன்றாக இருந்தாலும், அதை காவல்துறையினரே ஒப்புக்கொள்கிறார்கள்.
அடிதடி கலவரத்தில் ஈடுப்பட்ட காவல்துறையினர் சட்டத்துக்கு முன் நிறுத்தப்பட வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கருத்துகள் பரவி வருகிறது.