செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 14 ஜூன் 2022 (11:26 IST)

சென்னை மால்களிலும் மஞ்சப்பை!!

வணிக வளாகங்களில் ரூ.10-க்கு மஞ்சப்பை வழங்கும் இயந்திரத்தை வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல். 

 
பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதால், பொதுமக்கள் மஞ்சள் பை பயன்படுத்த வேண்டும் என தமிழக முதல்வர் சமீபத்தில் அறிவித்திருந்தார். இதனையடுத்து தமிழகத்தின் பல பகுதிகளில் தானியங்கி இயந்திரத்தில் பணம் செலுத்தினால் மஞ்சப்பை தரும் திட்டம் தொடங்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
 
இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் தானியங்கி இயந்திரத்தில் பணம் செலுத்தினால் மஞ்சப்பை பெறும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. சுற்றுச்சூழல் துறை செயலாளர் சுப்ரியா சாகு மஞ்சப்பை தானியங்கி இயந்திரத்தை தொடங்கி வைத்தார். சென்னை கோயம்பேடுக்கு வரும் பயணிகள் இனி இந்த இயந்திரத்தில் பணம் செலுத்தினால் மஞ்சள் பையை பெற்றுக் கொள்ளலாம். 
 
இதனைத்தொடர்ந்து வணிக வளாகங்களில் ரூ.10-க்கு மஞ்சப்பை வழங்கும் இயந்திரத்தை வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் துறை செயலாளர் சுப்ரியா தெரிவித்துள்ளார். மேலும் கோயம்பேடு போல பாரிமுனை மற்றும் மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையங்களிலும் மஞ்சப்பை இயந்திரம் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.