திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வெள்ளி, 20 அக்டோபர் 2023 (11:43 IST)

மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவேயில்லை! – சாலை மறியல் செய்த பெண்கள்!

Protest
மகளிர் உரிமைத்தொகை வழங்காததை கண்டித்து தமிழக அரசின் மீது குற்றம் சாட்டி நூற்றுக்கணக்கான பெண்கள் சாலை மறியல்


 
திருவையாறு அடுத்த கடுவெளி கிராமத்தில் சுமார் 507 பேர் மகளிர் உரிமைத் தொகைக்காக தமிழக அரசிடம் பதிவு செய்திருந்தனர் அதில் 108 பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை கிடைக்காததால் மீண்டும் பதிவு செய்வதற்கு கிராம நிர்வாக அலுவலரிடம் சென்று கேட்கும் பொழுது தாலுக்கா அலுவலகத்திற்கு சென்று கேட்கவும் என தெரிவித்துள்ளார் தாலுக்கா அலுவலகத்திற்கு சென்றால் அங்கே முறையான பதில் அளிக்கப்படாததால்  செலவு செய்து இரண்டு மாத காலமாக அலைந்து வருகிறோம்.

மற்றவர்களெல்லாம் இரண்டு முறை மகளிர் உரிமை தொகை ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் ஏற்றப்பட்டுள்ளது எங்களுக்கு ஏற்றப்படாமல் இருப்பதற்கு காரணம் என்ன அதிகாரிகள் அலட்சியத்தால் எங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை என குற்றம் சாட்டி திருவையாறு திருக்காட்டுப்பள்ளி கடுவெளி மெயின் ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.

சாலை மறியலில் ஈடுபட்டவர்களை திருவையாறு காவல் ஆய்வாளர் வனிதா பேச்சுவார்த்தை நடத்தினார் பேச்சுவார்த்தையில் வாக்குவாதம் ஏற்பட்டு சுமூகம் ஏற்படவில்லை.

அதனால் திருவையாறு தாசில்தார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் உங்களுக்கு இன்று உரிமைத் தொகை காண பதிவுகள் ஏற்றப்படும் தமிழக அரசு உறுதிப்படுத்தும் தொழில்நுட்ப கோளாறினால் பதிவேற்றம் ஆகவில்லை ஆகவே நீங்கள் கலைந்து செல்லுங்கள் என கேட்டுக்கொண்டார் மேலும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்கள் உடனடியாக எங்களுக்கு பதிவேற்றம் செய்து உரிமை தொகை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

எங்களை அலுவலர்கள் உதாசினம்படுத்தினார்கள்  என குற்றம் சாட்டினார்கள். இதுபோன்று நடைபெறாமல் இருக்க நான் பார்த்துக் கொள்கிறேன் நீங்கள் பதிவை செய்யப்பட்ட அனைவருக்கும் கண்டிப்பாக உரிமைத் தொகை கிடைக்க ஏற்பாடு செய்ய செய்வோம் தமிழக அரசு அறிவித்துள்ள காரணங்கள் இல்லாவிடில் கார் சொத்துக்கள் இல்லாதவர்களுக்கு இல்லாதவர்களுக்கு மட்டுமே வழங்க முடியும் என அறிவித்துள்ளது அந்த தகுதியின் அடிப்படையில் அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை கிடைக்கும் என தெரிவித்தார் உடனடியாக இன்று கிராம நிர்வாக அலுவலர் சந்தித்து தமிழக அரசு சொன்ன ஆவணங்களுடன் அணுகி பயன்பற்றுக் கொள்ளுங்கள் என  தெரிவித்ததின் அடிப்படையில் சாலை மறியல் கைவிடப்பட்டது.

மீண்டும் உரிமை தொகை கிடைக்கவில்லை எனில் அமைதி வழியில் போராட்டத்தை கையில் எடுப்போம் என பெண்கள் எச்சரிக்கை விடுத்து சென்றனர் இதனால் திருவையாறு திருக்காட்டுப்பள்ளி சாலையில் சுமார் 1:30 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணபட்டது