சொகுசுப் பேருந்தில் வந்த சத்தம் – இளம்பெண்ணின் அழிச்சாட்டியம் !

Last Modified வியாழன், 13 பிப்ரவரி 2020 (12:59 IST)

சென்னையில் இருந்து பாண்டிச்சேரிக்கு சென்ற சொகுசுப் பேருந்து ஒன்றில் பயணம் செய்த இளம் பெண்ணால் சக பயணிகள் பாதிக்கப்பட்ட நிகழ்ச்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை - பாண்டிச்சேரி இடையே சென்ற அந்த சொகுசு பேருந்தில் நவ நாகரீக ஆடையுடன் வந்து அமர்ந்த அந்த பெண் சக பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார். அதற்கு காரணம் அவரது ஆடை மட்டுமில்லை… அவரின் தள்ளாடிய நடையும்கூடதான். பேருந்து கிளம்பி பாதி தூரத்தை அடைந்தது, அந்த பெண் சத்தம் போட்டு கத்த ஆரம்பித்துள்ளார். இதனால் சக பயணிகள் தொந்தரவுக்கு ஆளாகியுள்ளனர். பஸ்ஸை நிறுத்திவிட்டு ஓட்டுனரும் நடத்துனரும் வந்து பார்த்த போது அந்த பெண் குடித்துக் கொண்டு இருந்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் அவரிடம் குடிப்பதை நிறுத்த சொல்லியுள்ளனர். அதற்கு அவர் மறுக்கவே அவரை இறக்கி விட முயன்றுள்ளனர்.

ஆனால் நள்ளிரவு நேரம் என்பதாலும் குடிபோதையில் இருப்பதாலும் பயணிகள் வேண்டாம் என சொல்லியுள்ளனர். இதனால் அவரை பயணம் செய்ய அனுமதித்துள்ளனர். ஆனாலும் அவர் பயணம் முழுவதும் குடித்துக் கொண்டே அலப்பறையுடன் வந்திருக்கிறார். இதையடுத்து பஸ்ஸில் வந்த பயணி ஒருவர் அவரைப் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பற்றி பகிர்ந்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :