புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 30 ஏப்ரல் 2017 (21:18 IST)

தேர்வு எழுதும்போது பிரசவ வலி, மணகோலத்தில் தேர்வு: TET தேர்வில் சுவாரஸ்யம்

தமிழகத்தில் ஆசிரியர் பணிகளுக்கான TET தேர்வு நேற்றும் இன்றும் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு நெற்றும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு இன்றும் நடைபெற்றது. இந்த இரண்டு தேர்வுகளில் ஒருசில சுவாரஸ்ய சம்பவங்களும் நடந்துள்ளது.


 


விழுப்புரம் மாவட்டம் சின்ன எடையார் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தி என்ற பெண் திருமணம் முடிந்ததும் மணக்கோலத்திலேயே TET தேர்வில் கலந்து கொண்டார்.  தாலிகட்டிய அடுத்த நிமிடம் அவர் தேர்வறையில் இருந்தது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.

இதேபோல் விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியத்ததை அடுத்த நூரோலை கிராமத்தைச் சேர்ந்த அந்தோணிராஜின் மனைவி நோயம் ரோஸ்மேரி என்ற நிறைமாத கர்ப்பிணி தேர்வு எழுதி கொண்டிருந்தபோது திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. தேர்வை அவர் மிஸ் செய்தாலும் அவருக்கு பிரசவம் நல்லபடியாக முடிந்ததால் அவருடைய குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் தேர்வு அறைக்கு வெளியே கைக்குழந்தையுடன் பல ஆண்கள் நின்று கொண்டிருந்ததையும் பல மையங்களில் பார்க்க முடிந்தது, குழந்தை அழுதபோது பால்கொடுத்துவிட்டு மீண்டும் ஒருசில பெண்கள் தேர்வு எழுதினர்.