1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: புதன், 12 ஏப்ரல் 2017 (23:21 IST)

ரூ.4.97 கோடி வரி ஏய்ப்பு: சரத்குமார்-ராதிகா கைதா?

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவரும் நடிகருமான சரத்குமார் வீடு மற்றும் அவரது மனைவியும் நடிகையுமான ராதிகாவின் ராடன் அலுவலகம் ஆகியவற்றில் அடுத்தடுத்து வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.



 


இந்த சோதனை முடிவுக்கு வந்து இன்று மதியம் இருவரிடமும் நேரில் விசாரணை நடத்தப்பட்டுள்ள நிலையில் இருவரும்ரூ. 4.97 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக ஒப்புதல் அளித்துள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த விசாரணை முழுதாக முடிவடைந்த பின்னரே  இருவர் மீது எந்தவிதமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முடிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இருவரும் கைது செய்யப்படுவார்களா? என்ற கேள்விக்கு வருமான வரித்துறையினர் பதில் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.