1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 19 ஜனவரி 2025 (09:05 IST)

கோமியம் குடிச்சா காய்ச்சல் குணமாகுமா? - சென்னை ஐஐடி இயக்குனரை வெச்சு செய்யும் நெட்டிசன்கள்!

Cow Urine

சமீபத்தில் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கோமியம் குடிப்பது பற்றி ஐஐடி இயக்குனர் கூரிய கருத்து சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

 

 

சென்னை மேற்கு மாம்பலத்தில் மாட்டுப்பொங்கலை ஒட்டி நடந்த கோ பூஜையில் சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். அப்போது பேசிய அவர் தனது தந்தை ஒரு சந்நியாசியிடம் சென்று தனக்கு ஜுரம் அடிக்கிறது, மருத்துவரை பார்க்கலாமா என்று கேட்டதாகவும், அதற்கு சந்நியாசி பசுமாட்டு கோமியம் குடித்தால் சரியாகி விடும் என்றும் சொன்னதாகவும் சொல்லி, அவ்வாறே தன் தந்தை செய்ததும் 15 நிமிடத்தில் அவருக்கு ஜுரம் சரியாகி விட்டதாகவும் பேசியுள்ளார்.

 

மேலும் கோமியம் மிகப்பெரிய மருந்து, பிணிகளை நீக்கும். பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை எதிர்க்கும் சக்தி கோமியத்தில் இருப்பதால் அவ்வப்போது கோமியத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் பேசியுள்ளார். 

 

இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப கல்வி நிறுவனமான ஐஐடியின் இயக்குனராக இருந்து கொண்டு முற்றிலும் நிரூபிக்கப்படாத ஒரு மருத்துவ முறையை காமகோடி பரிந்துரைத்திருப்பது சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

 

இதுதொடர்பாக கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர், ஐஐடி இயக்குநரே போலி அறிவியலை பரப்புவது பொறுத்தமற்றதாக இருப்பதாக கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் பல சமூக வலைதளவாசிகள் இந்த கருத்தை கிண்டல் செய்து வருகின்றனர்.

 

Edit by Prasanth.K