1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 3 நவம்பர் 2016 (10:56 IST)

குஷ்பு மீது ஒழுங்கு நடவடிக்கை பாயுமா?

குஷ்பு மீது ஒழுங்கு நடவடிக்கை பாயுமா?

பாஜகவின் பொது சிவில் சட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் குஷ்பு ஆதரவாக கருத்து தெரிவித்தது காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவர் மீது ஒழுங்கு நடவைக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.


 
 
பொது சிவில் சட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அந்த கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு அந்த சட்டத்தை ஆதரித்து பேசினார். இதனால் அதிர்ச்சியடைந்த தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் குஷ்புவின் கருத்து காங்கிரஸ் கட்சியின் கருத்தல்ல அது அவரது சொந்த கருத்து என கூறினார்.
 
காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிராக குஷ்பு பேசியதால் கட்சியில் அவருக்கு எதிர்ப்பு கிளம்பியது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேலிடத்துக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
 
இதனையடுத்து காங்கிரஸ் மேலிடம் குஷ்புவிடம் விளக்கம் கேட்டதாகவும், அதற்கு விளக்கமளித்த குஷ்பு தான் பொது சிவில் சட்டத்தை ஆதரிக்கவில்லை எனவும் இஸ்லாம் மதத்தில் உள்ள முத்தலாக் முறை, பெண் உரிமையை பாதிக்கும் செயல் என்று தான் கூறியதாக கூறியுள்ளார்.
 
ஆனால் குஷ்புவின் விளக்கத்தை காங்கிரஸ் மேலிடம் ஏற்காததால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும் என காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.