சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வைபை சேவை நிறுத்தம்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வைபை வசதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் வசதிக்காக வைபை இன்டர்நெட் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் அரை மணி நேரம் வரை இலவசமாக இன்டர்நெட்டை பயன்படுத்த முடியும். அதன்பின்னர் கட்டணம் செலுத்த வேண்டும். இதன்மூலம் ஏராளமான பயணிகள் பயனடைந்துவருகின்றனர்.
இந்நிலையில், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வைபை வசதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
அதிவேக வைபை வசதிக்கான பணிகளை ரயில்டெல் காப்பரேசன் நிறுவனம் மேற்கொண்டு வருவதால், இன்று முதல் வைபை சேவை நிறுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அதிவேக வைபை பணிகள் முடிவடைந்ததும் ஜூலை 14 முதல் மீண்டும் இந்த சேவை செயல்படத் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.