வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 10 செப்டம்பர் 2015 (16:10 IST)

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனின் தலையில் கல்லை தூக்கிப்போட்டு கொன்ற மனைவி

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால்  கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனின் தலையில் கல்லை தூக்கிப்போட்டு கொன்ற மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
 

 
சென்னை ஓட்டேரி செல்லப்பா தெருவில் வசித்து வந்தவர் ஜவஹர்லால் (45) என்பவர் பெயிண்டரான வேலைகளை காண்ட்ராக்ட் எடுத்து செய்து வந்துள்ளார். இவருக்கு மனைவி பீம்லால் (42) என்ற மனைவியும், 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
 
ஜவஹர்லாலிடம் ராமபிரசாத் என்பவர் வேலை செய்து வந்துள்ளார். பின்னர், கடந்த 3 வருடங்களுக்கு முன்பு இவர் ஜவஹர்லாலை  விட்டு தனியாக காண்டிராக்டு எடுத்து பெயிண்டர் வேலை செய்து வந்துள்ளார்.
 
இதற்கிடையில், ஜவஹர்லாலின் மனைவி பீம்லாலுக்கும், ராமபிரசாத்துக்கும் இடையில் காதல் மலர்ந்துள்ளது. இருவரும் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இது ஜவஹர்லாலுக்கு தெரிய வர, அவர் தனது மனைவியை கண்டித்துள்ளார். ஆனால் பீம்லால் தனது காதல் விளையாட்டை தொடர்ந்துள்ளார். 
 
இதனால் ஜவஹர்லாலுக்கும் மனைவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவரை கொலை செய்தால்தான் இருவரும் நிம்மதியாக இருக்க முடியும் என்று ஜவஹர்லாலை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர்.
 
தக்க சமயம் பார்த்திருந்த நிலையில், நேற்று இரவு குழந்தைகள் தூங்கியதற்குப் பிறகு, பீம்லால், கள்ளக்காதலன் ராம பிரசாத்துக்கு போன் செய்து வரவழைத்தார். இருவரும் சேர்ந்து ஜவஹர்லாலின் தலையில் சிமெண்டு கல்லை தூக்கி போட்டு கொலை செய்துள்ளனர். மேலும், ரத்தக்கறை படிந்து காணப்பட்ட அந்த கல்லை தண்ணீரில் நன்றாக கழுவிய பீம்லால் அதனை மறைத்து வைத்திருந்தார்.
 
பின்னர், காலையில் எழுந்ததும், கணவரை மர்ம நபர்கள் கொன்றுவிட்டதாக நாடகமாடியுள்ளார். இது குறித்து, புளியந்தோப்பு காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது மனைவி பீம்லாலிடம் விசாரணை நடத்துகையில், வெளியில் இருந்து வந்தவர்கள் கொன்று விட்டதாகவே கூறி வந்தார்.
 
ஜவஹர்லால் கொலை செய்யப்பட்டு கிடந்த அறையில் சிமெண்டு கல்லின் உடைந்த பாகம் ஒன்று அறையில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. அதனை கண்டெடுத்த காவல் துறையுனர், உள்பக்கமாகவே பூட்டப்பட்டிருந்த வீட்டில் கல் வந்தது எப்படி என்று பீம்லாலிடம் துருவி துருவி விசாரித்தனர்.
 
பின்னர், இதனால் வேறு வழியில்லாமல் பீம்லால், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். பின்னர், பீம்லால் அதனை மறைத்து வைத்திருந்த கல்லையும் காவல் துறையுனர் பறிமுதல் செய்தனர். தப்பிய கள்ளக்காதலன் ராமபிரசாத்தை காவல் துறையுனர் தேடி வருகிறார்கள்.