செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 27 ஜூன் 2018 (08:48 IST)

கருணாஸ் அமைதியாக இருப்பது ஏன்? அதிர்ச்சி தகவல்

கருணாஸ் அமைதியாக இருப்பது ஏன்? அதிர்ச்சி தகவல்
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் திருவாடனை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கருணாஸ் எம்.எல்.ஏ கடந்த சில மாதங்களாக அடிக்கடி பரபரப்பான செய்திகளில் அடிபட்டுக்கொண்டிருந்தார். ஆனால் திடீரென சில நாட்களாக அவரது சத்தமே இல்லை.
 
இதுகுறித்து புலனாய்வு பத்திரிகை ஒன்று விசாரித்ததில் சமீபத்தில் திமுக நடத்திய போட்டி சட்டமன்ற கூட்டத்தில் கருணாஸ் கலந்து கொண்டார். அதிமுக சின்னத்தில் வெற்றி பெற்ற கருணாஸ், திமுகவின் போட்டி சட்டமன்றத்தில் எப்படி கலந்து கொள்ளலாம்/ இதனால் கருணாஸை எம்.எல்.ஏவை பதவியில் இருந்து ஏன் நீக்கக்கூடாது என்று சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும், இதனால் அதிர்ச்சி அடைந்த கருணாஸ் அமைதியாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
கருணாஸ் அமைதியாக இருப்பது ஏன்? அதிர்ச்சி தகவல்
18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க விவகாரம் ஒரு வருடத்திற்கு மேல் இழுத்து கொண்டு இருக்கும் நிலையில் அதிர்ஷ்டவசமாக எம்.எல்.ஏ ஆன கருணாஸ் அந்த பதவியை இழக்க விரும்புவாரா? அதனால்தான் அவர் அமைதியாகிவிட்டதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.