1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Who Support Edappadi from Dinakaran Team

எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்த தினகரன் அணியில் உள்ள 9 எம்எல்ஏக்கள்: பட்டியல் வெளியீடு?

எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்த தினகரன் அணியில் உள்ள 9 எம்எல்ஏக்கள்: பட்டியல் வெளியீடு?

எடப்பாடி பழனிச்சாமி
நேற்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தை அதிமுக தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று கூட்டினார். இந்த கூட்டத்துக்கு 105 எம்எல்ஏக்கள் வருகை புரிந்தனர்.


 
 
இந்த கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார். 111 எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு கையொப்பமிட்டனர். தினகரன் அணியில் இருந்து 9 எம்எல்ஏக்கள் முதல்வருடன் தொடர்புகொண்டு, நீங்கள் எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம், அரசு நீடிக்க உறுதுணையாக இருப்போம் என கூறியுள்ளனர். மூன்று கூட்டணி கட்சி எம்எல்ஏக்களும் எங்களுக்கு ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளனர் என தெரிவித்தார்.
 
இதனையடுத்து நேற்று தினகரன் அணியை சேர்ந்த எம்எல்ஏக்கள் வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அவர்கள் பேசும்போது எடப்பாடி பழனிசாமியை எங்கள் அணியை சேர்ந்த 9 எம்எல்ஏக்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆதரவு தெரிவித்ததாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார். அந்த 9 எம்எல்ஏக்களின் பெயரை வெளியிட்டால், அவர்களை ஊடகங்கள் முன்னால் நிறுத்தி எது உண்மை என்பதை நிரூபிக்கத் தயார் என சவால் விட்டுள்ளனர். இதனால் எடப்பாடி பழனிச்சாமி அணியினர் அந்த 9 எம்எல்ஏக்களின் பெயரை வெளியிடுவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
About Writer
Caston
அடுத்த கட்டுரையில்
நீட் தேர்வால் சமூக நீதி பாதுகாக்கப்பட்டுள்ளதாம்: தமிழிசை விளக்கம்!