1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Whether Ex DMK personality murdered by giving lift?

மர்ம நபரால் கொலை செய்யப்பட்ட மாஜி திமுக பிரமுர்

லிப்ட்
விழுப்புரம் மாவட்ட திமுக  முன்னாள் பிரதிநிதி லெனின் பாண்டியன் அடையாளம் தெரியாத மர்ம நபரால் கொலை செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் லெனின் பாண்டியன். இன்று திருவாமத்தூரில் இருந்து  விழுப்புரம் நோக்கி, தனது இரு சக்கர வாகனத்தில் பயணித்து கொண்டிருந்தார். 
 
அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவருடன் பயணித்துள்ளார். பின்பு இருசக்கர வாகனம் சானத்தோப்பு என்ற பகுதியை நெருங்கிய போது, அந்த மர்ம நபர் லெனின் பாண்டியனை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார். இதனால் பாண்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
 
இந்நிலையில் போலீசார் இருசக்கர வாகனத்தில் பயணித்த, அந்த நபர் லிப்ட் கேட்டு ஏறினாரா அல்லது லெனின் பாண்டியனின் நண்பரா என விசாரித்து வருகின்றனர்.