ரூ 5 லட்சம் கேட்டு வாட்ஸ்அப்பில் பேசி மாட்டிக்கொண்ட காவல்துறை ஆய்வாளர்


Suresh| Last Updated: திங்கள், 11 ஜனவரி 2016 (11:25 IST)
குற்றவாளியை கைது செய்யாமல் இருக்க வழக்கறிஞரிடம் ரூ.5 லட்சம் பேரம் பேசிய காவல்துறை ஆய்வாளரின் பேச்சு வாட்ஸ் அப்பின் உதவியால் சிக்கியுள்ளார்.

 

 
திருவண்ணாமலை மாவட்டத்தில் வழக்கறிஞரும் - காவல்துறை ஆய்வாளரும் பேசிய 11 நிமிடம் ஆடியோ வாட்ஸ் அப்பில் பரவியது.
 
அந்த ஆடியோவில், குற்றவாளியை விடுவிக்க ரூ.5 லட்சத்துக்கு இன்ஸ்பெக்டர் பேரம் பேசியதும், இதற்கு வக்கீல் மறுத்ததும் பதிவாகி இருந்தது.
 
அந்த உரையாடல் வருமாறு:-
 
காவல்துறை ஆய்வாளர்: சென்னையில் இருந்து இன்ஸ்பெக்டர் பேசுகிறேன்.
 
வழக்கறிஞர்: நிலுவையில் உள்ள வழக்கில் தொடர்புடைய ஒரு நபரை கைது செய்யவேண்டாம். 
இன்ஸ்பெக்டர்: இதுதொடர்பாக உங்களுக்கு ஏற்கனவே 2 மாதம் அவகாசம் கொடுத்துவிட்டேன். ஆனாலும் சொன்னபடி நடந்து கொள்ளவில்லை.
 
நான் இந்த ஸ்டேஷனில் இருக்கும்வரை அந்த நபரை கைது செய்யாமல் இருக்கவேண்டுமானால் ஏற்கனவே பேசியபடி ரூ 5 லட்சத்தை கொண்டு வந்து கொடுக்காவிட்டால், இது குறித்து என்னிடம் தொடர்ந்து பேச வேண்டாம்.
வழக்கறிஞர்: என்னிடம் பணம் இல்லை. இன்சூரன்ஸ் பணம் வந்ததும் சொன்னபடி கொடுத்துவிடுகிறேன் 
 
காவல்துறை ஆய்வாளர்: வரும் வியாழக்கிழமைக்குள் சென்னைக்கு வந்து பணத்தை செட்டில் செய்துவிடுங்கள். ரூ 5 லட்சத்தில் 1 லட்சத்தை உங்களுக்கும் மற்றும் 1 லட்சத்தை உன்னுடன் வரும் நபருக்கும் பிரித்து கொடுத்துவிட்டு 3 லட்சத்தை மட்டும் நான் எடுத்துக்கொள்கிறேன். 
 
தேவைப்பட்டால் அந்த நபரையும் கூடவே அழைத்து வாருங்கள் எனக்கு ஆட்சேபணை இல்லை. 
 
இவ்வாறு தொடர்ந்து நடந்த உரையாடலின் இறுதியில், "நாம் பேசுவதை எல்லாம் ரெக்கார்டு செய்கிறாயா?" என  இன்ஸ்பெக்டர் கேட்கிறார்.
 
அதற்கு பதிலளித்த வக்கீல், "சத்தியமாக ரெக்கார்டு செய்யவில்லை. அந்த வசதி என் போனில் இல்லை. உங்களை நேரில் பார்க்கும்போது என் போனை உங்களிடம் காட்டுகிறேன்" என்று கூறுகிறார்
 
சில இடங்களில் ஆபாச வார்த்தைகள் இடம் பெறும் அந்த பதிவில், அந்த வழக்குறைஞரின் பெயரையும், அவரது அண்ணன் பெயரையும் குற்றவாளிகளின் பெயர்களையும் ஆங்காங்கே காவல்துறை ஆய்வாளர்  குறிப்பிடுகிறார்.
 
இந்நிலையில், அந்த காவல்துறை ஆய்வாளர் பழனியை வேலூருக்கு இடமாற்றம் செய்து, காத்திருப்போர் பட்டியிலில் வைக்க டிஐஜி உத்தரவிட்டார்.


இதில் மேலும் படிக்கவும் :