1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Dinesh
Last Updated : திங்கள், 18 ஜூலை 2016 (16:50 IST)

சுவாதி கொலை வழக்கில் பிலால் மாலிக்கை விசாரிக்க வேண்டிய தேவை என்ன? - திருமாவளவன்

சுவாதி கொலை வழக்கில் பிலால் மாலிக்கை விசாரிக்க வேண்டிய தேவை என்ன என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.


 


சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் இன்று எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதுகுறித்து திருமாவளவன் கூறுகையில், ”சுவாதி கொலையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பிலால் மாலிக் சொன்ன வாக்குமூலங்களை ஏன் வெளியிடவில்லை மேலும், சுவாதி கொலை வழக்கில் ராம்குமாரைக் கைது செய்த பிறகு, அதைத் தொடர்ந்து பிலால் மாலிக்கை நான்கு நாட்களாக காவல்துறை விசாரித்து வருவதாகச் சொல்லப்படுகிறது. ராம்குமார் கைது செய்யப்பட்டவுடன் காவல்துறை சொன்ன தகவல் என்னவென்றால் ராம்குமார் தான் குற்றவாளி, வேறு யாருக்கும் இதில் தொடர்பில்லை என்று கூறினார்கள். ராம்குமார் எதற்காக சுவாதியைக் கொலை செய்தான் என்கிற விளக்கத்தைத் தந்துவிட்ட பிறகு, பிலால் மாலிக்கை காவல்துறை விசாரிக்க வேண்டிய தேவை என்ன? நான்கு நாள் அப்படி என்ன விசாரித்தார்கள்? அந்த விசாரணையில் பிலால் சொன்ன வாக்குமூலங்கள் என்ன என்பதை ஏன் வெளிச்சத்துக்குக் கொண்டுவரக் கூடாது? பொதுமக்களுக்கு ஏன் தெரிவிக்கக் கூடாது? பிலாலுக்கும், சுவாதிக்கும் இருந்தது வெறும் நட்புறவு தான் என்றால் அவர்களுக்கிடையேயான உரையாடல்களை அல்லது அவர் சொன்ன வாக்குமூலங்களை ஏன் காவல்துறை வெளியிடக்கூடாது” என்று என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.