நாங்கள்தான் உண்மையான மனிதநேய மக்கள் கட்சி: தமிமுன் அன்சாரி


K.N.Vadivel| Last Modified திங்கள், 12 அக்டோபர் 2015 (04:56 IST)
உண்மையான மனிதநேய மக்கள் கட்சி நாங்கள் தான்  என்பதை தஞ்சை பொதுக்குழு மூலம் நிரூபித்துள்ளோம் என தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
 
 
மனிதநேய மக்கள் கட்சியின் சென்னையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் பொது செயலாளர் தமிமுன் அன்சாரி உள்ளிட்ட சில கட்சி நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதாக ஜவாருல்லா அறிவித்தார்.
 
இதனால், மனிதநேய மக்கள் கட்சியின் பொதுக் குழு (போட்டி கூட்டம்) தமிமுன் அன்சாரி தலைமையில் தஞ்சையில் நடைபெற்றது. அப்போது பல முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பின்பு தமிமுன் அன்சாரி செய்தியாளர்களிடம்  கூறியதாவது:-
 
இங்கே நடைபெற்ற பொதுக்குழுதான் மனிதநேய மக்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ  பொதுக்குழு ஆகும். மொத்தம் உள்ள பொதுக்குழு உறுப்பினர்கள் 1,500 பேரில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இங்கே கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
 
இதன் மூலம் சட்டிப்படி நாங்கள் தான் உண்மையான மனிதநேய மக்கள் கட்சி என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எங்கள் கட்சியின் கொடி, சின்னங்களை யாரும் பயன்படுத்தக்கூடாது என்றார். இதன் மூலம் மனிதநேய மக்கள் கட்சியில் பலத்த போட்டி உருவாகியுள்ளது.
 


இதில் மேலும் படிக்கவும் :