1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sasikala
Last Modified: சனி, 18 பிப்ரவரி 2017 (15:21 IST)

சட்டப்பேரவையில் தாக்கப்பட்டேன்: ஸ்டாலின் பேட்டி!

சபாநாயகர் தனபால் அவைக்கு குந்தகம் விளைவித்தாக கூறி திமுக எம்எல்ஏக்களை வெளியேற்றுமாறு உத்தரவிட்டார். ஆனால்  சட்டசபையில் இருந்து வெளியேற மறுத்து ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 
எடப்பாடி பழனிச்சாமி கொண்டுவந்த நம்பிக்கை வாக்கெடுப்பை முன்மொழிய சபாநாயகர் முயன்றபோது அதை திமுகவினர்  தடுத்ததோடு, ரகசிய வாக்கெடுப்பு தேவை என கோரி பெரும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபாநாயகர் தள்ளுமுள்ளுவிற்கு  உள்ளானார். இதனையடுத்து அவை 1 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
 
அவை மீண்டும் கூடிய உடன் தனபால் தனக்கு நேர்ந்த துன்பத்தைக்கூறி வேதனையுடன் பேசினார். திமுக உறுப்பினர்கள்  மீண்டும் அமளியில் ஈடுபடவே அவர்களை வெளியேற்றுமாறு சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். சட்டசபையை 3 மணிவரை  ஒத்திவைத்தார் சபாநாயகர் தனபால். இரண்டாவது முறையாக சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.
 
மீண்டும் அமளியில் ஈடுபட்ட எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலினை அவைக்காவலர்கள் திமுக உறுப்பினர்கள் மற்றும் 40க்கும்  மேற்பட்ட எம்எல்ஏக்கள் சட்டசபையில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஸ்டாலினை  அவைக்காவலர்கள் குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
 
மேற்சட்டை கிழிந்த நிலையில் வெளியே வந்த ஸ்டாலின் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். தெரிந்தோ,  தெரியாமல் திமுகவினர் செய்த தவறுக்கு, திமுக சார்ப்பில் மன்னிப்பு கோரினேன். மேலும் சட்டசபையில் தாக்கப்பட்டேன்  எனவும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து ஆளுநரை சந்தித்து புகார் செய்யவிருப்பதாகவும் தெரிவித்தார்.
 
இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினரும் வெளிநடப்பு செய்தனர்.