1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 15 ஜூன் 2016 (11:05 IST)

பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் 5 பேருக்கு பிடிவாரண்ட்

பசுபதி பாண்டியன் கொலை வழக்கு தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகாத 5 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.
 

 
கடந்த 2012ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி திண்டுக்கல் அருகேயுள்ள நந்தவனப்பட்டியில், தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனத்தலைவர் பசுபதிபாண்டியன் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்குதொடர்பாக தூத்துக்குடிமாவட்டம் மூலக்கரையைச் சேர்ந்த சுபாஷ் பண்ணையார் உள்ளிட்ட 18 பேர்வழக்கு பதிவு செய்யப்பட்டது.
 
நீதிமன்றத்தில் செவ்வாயன்று மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் முதல் குற்றவாளியான சுபாஷ் பண்ணையார் மற்றும் சண்முகம், அருளானந்தம், நிர்மலா, நட்டு என்ற நடராஜன், பாட்சா என்ற மாடசாமி, ஆனந்தராஜ், தாராசிங், தன்னாசி, அருள்மொழி ஆகிய 10 பேர் ஆஜராகினர்.
 
இதில் முத்துப்பாண்டி, புறாமாடசாமி, ஆறுமுகசாமி ஆகிய 3 பேர் இறந்து விட்டனர். இவர்களுக்கான இறப்பு சான்றிதழ் சமர்ப்பிக்க மாவட்ட நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார்.
 
மேலும் ஆண்டனி, ஆனந்த், பிரபு, ரமேஸ், கோழி அருள் உட்பட 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அவர்களுக்கு பிடிவாரண்ட்டு பிற்பித்தும், ஜூலை 14ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தும் உத்தரவிட்டார்.