வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 23 ஜூலை 2019 (08:48 IST)

வேலூர் தேர்தல் – அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு அளித்த விஷால் நற்பணி மன்றம் !

வேலூர் தேர்தலில் அதிமுக வேட்பாளரான ஏ சி சண்முகத்துக்கு விஷாலின் நற்பணி மன்ற நிர்வாகிகள் ஆதரவளித்துள்ளன.

நிறுத்தி வைக்கப்பட்ட வேலூர் மக்களவைத் தேர்தல் ஆக்ஸ்டு 22 ஆம் தேதி நடைபெறும் என அறிவித்ததையடுத்து மீண்டும் திமுக சார்பில் கதிர் ஆனந்தும் அதிமுக சார்பில் ஏ சி சண்முகமும் மீண்டும் போட்டியிட உள்ளனர். இதையடுத்து நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக தீபலட்சுமி என்பவரை சீமான் அறிவித்துள்ளார். வேட்புமனுத்தாக்கல் முடிந்துள்ள நிலையில் வேலூர் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் இருப் பிரதான கட்சிகளும் மும்முரமாக உள்ளனர்.

இந்நிலையில் அதிமுக வேட்பாளர் ஏ சி சண்முகத்தைச் சந்தித்த வேலூர் விஷால் மன்ற நிர்வாகிகள் அவருக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள கடிதத்தில் “நடைபெறவுள்ள வேலூர் மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர், சிறந்த பண்பாளர், சிறந்த நிர்வாகியுமான மரியாதைக்குரிய அண்ணன் ஏ.சி.சண்முகத்துக்கு எங்களுடைய விஷால் மன்றம் முழுமையாக ஆதரவளிக்கிறது. மேலும் அண்ணனின் வெற்றிக்காக வேலூர் தொகுதி முழுவதும் எங்கள் அமைப்பின் சார்பாகப் பணியாற்றுவோம்’ எனக் கூறியுள்ளனர்.

ஆரம்பம் காலம் முதலே திமுக ஆதரவு கொண்டவர் என்று பேசப்பட்ட விஷால் இப்போது அதிமுக பக்கம் போவதற்காகதான் இந்த நடவடிக்கையா எனக் கேள்விகள் எழுந்துள்ளன.