வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 6 செப்டம்பர் 2021 (10:43 IST)

நகையும் போச்சு, வீடும் போச்சு..! – ஊரை ஏமாற்றிய அண்டா சாமியார்!

விளாத்திக்குளத்தில் குறி சொல்வதாக கூறி பெண் ஒருவரிடம் நகையை ஏமாற்றியதுடன், வீட்டையும் இடிக்க வைத்த அண்டா சாமியாரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டன் விளாத்திக்குளம் பகுதியில் சக்தி வாராகி என்ற ஆசிரமத்தை நடத்தி வருபவர் சக்தி. சமீபத்தில் இவரிடம் பேச்சியம்மாள் என்பவர் குறிகேட்க சென்றுள்ளார். பேச்சியம்மாளின் கணவரின் ஆத்மா சாந்தியடையவில்லை என்றும் அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்றும் பேச்சியம்மாளிடம் இரண்டறை சவரன் நகையை வாங்கியுள்ளார்.

பின்னர் அவரிடம் 30 ஆயிரம் கொடுத்து வீட்டை இடிக்க சொல்லியதாக கூறப்படுகிறது. சாமியாரின் பேச்சை நம்பி வீட்டை இடித்த பேச்சியம்மாள் தான் ஏமாற்றப்பட்டது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் இதுகுறித்து போலீஸார் அண்டா சாமியார் சக்தியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.