1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 15 ஏப்ரல் 2018 (12:49 IST)

சாதனை படைத்த கேப்டன் விஜயகாந்திற்கு பாராட்டு விழா

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் திரைத்துறைக்கு வந்து 40 ஆண்டுகள் ஆகிய நிலையில் இன்று அவருக்கு காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் பாராட்டு விழா நடைபெறுகிறது.
150 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் கேப்டன் விஜயகாந்த், 1978 ஆண்டு திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். மதுரையில் இருந்து சினிமா ஆசையோடு வந்த விஜயகாந்த் இயக்குநர் எம்.ஏ காஜாவின் இனிக்கும் இளமை படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். ஆரம்பத்தில் இவரது படம் அவ்வளவாக வெற்றி பெறவில்லை. பின்னர் சட்டம் ஒரு இருட்டறை படத்தின் மூலம் விஜயகாந்த் பிரபலமானார். 
 
1980 களில் உச்சத்தில் இருந்த ரஜினி, கமலுக்கு ஈடாக விஜயகாந்த் திகழ்ந்தார். மேலும் பல இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு அளித்தார். இதனால் இவரது புகழ் உச்சத்திற்கு சென்றது. தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக பதவி வகித்த விஜயகாந்த் சிறப்பாக செயல்பட்டு பல லட்ச ரூபாய் கடன்களை அடைத்தார்.

தனது 37 வது வயதில்  பிரேமலதாவை திருமணம் செய்துகொண்ட விஜயகாந்திற்கு விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் என இரண்டு மகன்கள் பிறந்தனர்.
2005ஆம் ஆண்டு விஜயகாந்த் தேமுதிகவைத் தொடங்கினார். தமிழகத்தின் மிகப்பெரிய கட்சியான திமுக வை தோற்கடித்து அதிமுகவிற்கு எதிர்கட்சியாக வாகை சூடினார்.
 
விஜயகாந்த் கலைத்துறைக்கு வந்து இத்துடன் 40 வருடங்கள் நிறைவடைந்த நிலையில், அவருக்கு இன்று காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் பாராட்டு விழா நடைபெறுகிறது.