ஆளுனரை சந்திக்கின்றாரா விஜய்? ஊழல் பட்டியலை கொடுக்கவிருப்பதாக தகவல்..!
தமிழக ஆளுநரை தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் சந்திக்க இருப்பதாகவும், அப்போது அவர் ஊழல் பட்டியலை கொடுக்க இருப்பதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம், தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னால் தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்தார்.
அந்த மாநாட்டின் உரையில், அவர் நேரடியாகவே திராவிட மாடல் அரசு செய்யும் ஊழல்களை எடுத்துச் சொன்ன போது, திமுக மற்றும் கூட்டணி தரப்பிலிருந்து கடும் கண்டனங்கள் குவிந்து வந்தது.
இந்த நிலையில், நடிகர் விஜய் விரைவில் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாகவும், அதற்கு முன்பே அவர் ஊழல் பட்டியலுடன் கவர்னரை சந்திக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஊழல் பட்டியலை கவர்னரிடம் கொடுத்திருக்கும் நிலையில், தற்போது விஜய் கொடுக்க இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva