1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 2 பிப்ரவரி 2024 (07:49 IST)

ஆரம்பமே ஹைஸ்பீட்.. 24 மணி நேரத்தில் ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க விஜய் திட்டம்..!

நடிகர் விஜய் ஆரம்பிக்க இருக்கும் அரசியல் கட்சியில் 24 மணி நேரத்தில் ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பிக்க கடந்த சில மாதங்களாக ஏற்பாடுகள் செய்து வரும் நிலையில் இன்னும் ஓரிரு நாளில் அவரது அரசியல் கட்சி தேர்தல் ஆணையத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் விஜய் ஆரம்பிக்கும் அரசியல் கட்சியில் உறுப்பினர்களை சேர்க்க புதிய செயலி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் அந்த செயலி மூலம் உறுப்பினர்களை சேர்க்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி விஜய் மக்கள் இயக்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும் ஒரே நாளில் கட்சியில் உறுப்பினர்களாக சேர்க்க திட்டமிட்டுள்ளதாகவும் கட்சியின் பெயர் அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்தில் ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.  

இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு சாதனையாக கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva