1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 26 ஜூலை 2023 (09:07 IST)

பிரசாந்த் கிஷோரை சந்தித்தாரா விஜய்? அரசியல் பிரவேசம் குறித்து ஆலோசனையா?

அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரை நடிகர் விஜய் ரகசியமாக சந்தித்ததாகவும் அரசியல் பிரவேசம் குறித்து அவர் ஆலோசனை செய்ததாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
நடிகர் விஜய்யின் சமீப கால நடவடிக்கைகள் அவர் அரசியலுக்கு வர இருப்பதை உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. திமுக ஆட்சிக்கு பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ள நிலையில் எதிர்க்கட்சிகளும் வலுவாக இல்லாத நிலையில் இந்த நேரத்தில் அரசியலில் நுழைந்தால் கண்டிப்பாக ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று விஜய் நினைப்பதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் தான் அரசியலில் ஈடுபட்டால் தனக்கு எந்த அளவுக்கு வெற்றி கிடைக்கும் என்பதை அறிவதற்காக ஒரு ரகசிய சர்வே செய்ததாகவும் அதில் அவருக்கு 60% ஆதரவு கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் பிரசாந்த் கிஷோர் போன்ற அரசியல் ஆலோசகரை அணுகி களத்தில் இறங்கினால் நிச்சயம் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று விஜய் நினைக்கிறார். ஏற்கனவே மம்தா பானர்ஜி, நிதிஷ்குமார், ஜெகன்மோகன் ரெட்டி ,மு க ஸ்டாலின் ஆகியவர்களுக்கு ஆலோசகராக பணியாற்றிய பிரசாந்த் கிஷோர் விஜய்க்கும் பணியாற்றுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Siva