வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 5 செப்டம்பர் 2018 (16:12 IST)

இப்படி செய்து விட்டாளே பாவி! - அபிராமியின் கணவர் விஜய் கதறல்

குன்றத்தூரில் கள்ளக்காதலனுடன் வாழ்வதற்காக தனது குழந்தைகளை விஷம் கொடுத்து கொலை செய்து போலீசாரிடம் சிக்கியுள்ள அபிராமி கொடுக்கும் வாக்குமூலங்கள் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.  

 
சுந்தரம், அபிராமி இருவரையும் போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். அபிராமி தொடர்புடைய பல விவகாரங்கள் தினமும் வெளிவந்து கொண்டிருக்கிறது. 
 
மரணமடைந்த தனது இரு குழந்தைகளையும் அடக்கம் செய்த போது இரு குழந்தைகளையும் கட்டி அணைத்துக்கொண்டு அபிராமியின் கணவர் விஜய் கதறி அழுதது அங்கிருந்த அவரின் உறவினர்கள் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது. 
 
குழந்தைகளை அடிக்க கூட மாட்டேளே. ஆனால் கொலை செய்து விட்டாளே! எட்டு வருட காதல் வாழ்கை பறிபோனது பற்றி கூட எனக்கு கவலையில்லை. என் குழந்தைகளை இல்லாமல் செய்து விட்டாளே.  அவர்களுக்கு விஷம் கொடுக்க அவளுக்கு எப்படி மனம் வந்தது? படுக்கை அறை சென்று பார்த்திருந்தால் ஒரு குழந்தையாவது காப்பாற்றி இருப்பேனே! என அவர் கண்ணீர் விட்டு கதறியுள்ளார்.