செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 21 மார்ச் 2017 (16:11 IST)

சசிகலாவால் பாதிக்கப்பட்டோர் சங்கம்: இந்த ஐடியாவும் நல்லாத்தான் இருக்கு!

சசிகலாவால் பாதிக்கப்பட்டோர் சங்கம்: இந்த ஐடியாவும் நல்லாத்தான் இருக்கு!

தமிழகத்தில் ஆர்கே நகர் இடைத்தேர்தல் களம் கொஞ்சம் கொஞ்சமாக சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டன. அனைத்து பிரதான கட்சிகளும் தங்கள் கட்சி வேட்பாளர்களை அறிவித்து விட்டனர்.


 
 
இதில் அதிமுக மூன்று அணிகளாக பிரிந்து களம் இறங்குகிறது. சசிகலா அணியில் டிடிவி தினகரனும், ஓபிஎஸ் அணியில் மதுசூதனனும், தீபாவும் களம் இறங்குகின்றனர். மேலும் திமுகவில் மருத கணேஷ், பாஜகவில் கங்கை அமரன் போன்றோர் களம் இறங்கியுள்ளனர்.
 
இவர்கள் தான் இந்த தேர்தலில் முக்கியமான வேட்பாளர்களாக பார்க்கப்படுகிறார்கள். இதில் பாஜக சார்பில் கங்கை அமரன் களம் இறக்கப்பட்டதற்கு காரணம் அவர் சசிகலாவால் நேரடியாக பாதிக்கப்பட்டார். இது தேர்தல் பிரச்சாரத்துக்கு உதவும் என பேசப்படுகிறது.
 
இதனையடுத்து தமிழ் இந்து நாளிதழுக்கு பேட்டியளித்த கங்கை அமரனிடம் சசிகலாவால் நேரடியாக பாதிக்கப்பட்டவர் என்பதால் உங்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறதே என்ற கேள்வி கேட்கப்பட்டது.
 
இதற்கு பதில் அளித்த அவர், சசிகலாவால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் என்னைப் போல் நிறைய பேர் இருக்கிறார்கள். அதற்காக என்னை முன்னிறுத்த வேண்டுமானால் 'சசிகலாவால் பாதிக்கப்பட்டோர் சங்கம்' என்று ஒன்றை நிறுவி அதற்குத்தான் தலைமையாக்கியிருக்க வேண்டும் என்றார்.