தமிழில் மூத்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் காலமானார்

Sinoj| Last Updated: செவ்வாய், 18 மே 2021 (00:22 IST)

கரிசல் காட்டு இலக்கியத்தந்தை என தமிழர்களால் அன்புடன் அழைக்கப்படு வந்த கி.ராஜநாராயணன் தற்போது வயது மூப்பினால் காலமானார் அவருக்கு வயது 98 ஆகும்.

தமிழில் மூத்த எழுத்தாளரான கி.ராஜநாராயணன் தனது மனைவியுடன்
புதுச்சேரியில் வசித்துவந்தார். இந்நிலையில் வயது மூப்பில் காரணமாக இன்று அவர் காலமானார்.

இவரது படைப்புகள்: கோபால்லபுரம் கிராமம், கோபாலபுரம் கிராமத்து மக்கள், கதவு என்ற சிறுகதை மிகப்புகழ் பெற்றது ஆகும்

சமீபத்தில் தமிழக எழுத்தாளர்கள் கி.ராஜநாராயணனுக்கு ஞானபீடம் விருதளிக்க வேண்டுமெனக் குரல் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவுக்கு தமிழக எழுத்தாளர்களும் வாசகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ki.raja narayananஇதில் மேலும் படிக்கவும் :