திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : புதன், 13 செப்டம்பர் 2023 (16:54 IST)

சனாதனத்தை எதிர்த்து மாணவர்கள் பேச வேண்டும்: முதல்வர் அறிக்கைக்கு வானதி சீனிவாசன் கண்டனம்..!

சனாதனத்தை எதிர்த்து மாணவர்கள் பேச வேண்டும் என்று திருவாரூர்  திருவிக அரசு கல்லூரி முதல்வர் ராஜா ராமன் மாணவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி வைத்ததற்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 
 
சனாதன எதிர்ப்பு கருத்துக்களை வரும் 15ஆம் தேதி மாலை 3 மணி அளவில் காட்டூரில் உள்ள கலைஞர் கோட்டத்தில் மாணவர்கள் பேச வேண்டும் என்று  திருவாரூர் திருவிக அரசு கலை கல்லூரி முதல்வர் மாணவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். 
 
இந்த சுற்றறிக்கை குறித்து கருத்து தெரிவித்த வானதி சீனிவாசன் சனாதனம் குறித்து அரசு கல்லூரி மாணவர்களிடையே திமுக நஞ்சை விதைக்கிறது என்றும் கல்லூரி முதல்வரின் சுற்றறிக்கை அரசியல் அமைப்புக்கு எதிராக இல்லையா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
Edited by Mahendran