வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: திங்கள், 11 மே 2015 (20:49 IST)

நீங்களுமா வைகோ?: அதிர்ச்சியில் அரசியல் கட்சிகள்!

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை பெற்ற, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 

 
சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூரு தனி நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.
 
இதனால், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட ஜெயலலிதா, பின்பு உச்ச நீதிமன்றத்தில் ஜாமீனில் பெற்று வெளியே வந்தார். இதனால், தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, தனது பதவியை துறக்க நேரிட்டது.
 
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு எதிரான இந்த வழக்கில், பெங்களூரூ தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடியோடு ரத்து செய்துள்ளதோடு, அபராத தொகை ரூ.100 கோடியையும் தள்ளுபடி செய்து பெங்களூரூ உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி உத்தரவிட்டார்.
 
இந்நிலையில், ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலையானதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
அதேபோல, அதிமுக கூட்டணி கட்சி தலைவர்களான சரத்குமார், வேல்முருகன், செ.கு.தமிழரசன், பார்வார்டு பிளாக் கதிரவன் மற்றும் மதுரை ஆதீனம் போன்றவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
 
இதில் அதிமுக கூட்டணியில் இல்லாத மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளது தான் தமிழக அரசியலில் பலரது புருவத்தையும் உயரவைத்துள்ளது.
 
தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரும் நிலையில், திமுகவுடன் கூட்டணி செல்ல மதிமுக தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகின்றது. அதன் வெளிப்பாடாகாவே, சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்ட வைகோ வரவேற்றுள்ளாராம்.
 
ஆக, வரும் சட்டமன்ற தேர்தலின்போது, அதிமுக கூட்டணியில் மதிமுக இடம் பெறலாம் என தமிழக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். மேலும், ஜெயலலிதாவுக்கு, வைகோ சொன்னதை கேட்டு திமுக உள்ளிட்ட தலைவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.