1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 9 ஜூலை 2019 (12:20 IST)

பதவி கேட்டு ஒருத்தன் வரமாட்டான்... பேக் அடித்த திமுக: எம்.பி ஆகும் வைகோ!!

வைகோ மீது போடப்பட்ட தேச துரோக வழக்கில் அவர் குற்றாவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டாதல், அவர் மாநிலங்களவை மனு ஏற்கப்படுமா என்ற சந்தேகம் தீர்ந்துள்ளது. 
 
கடந்த 10 ஆண்டுகளாக வைகோ மீது நடைபெற்று வந்த தேசத் துரோக வழக்கின் தீர்ப்பு சமீபத்தில் வெளிவந்தது. இதில் வைகோ குற்றவாளி என அறிவிக்கப்பட்டு அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும் ரூ.10,000 அபராதமும் விதிக்கப்பட்டது. 
 
அபராதத்தை உடனே கட்டிய வைகோ, தீர்ப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் தீர்ப்பு ஒரு மாதம் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் வைகோ மாநிலங்களவை தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்தார். 
குற்றவாளி என தீர்ப்பு வெளியனதால் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக திமுகவின் சார்பில் என்.ஆர்.இளங்கோ என்பவர் 4வது வேட்பாளராக மனு தாக்கல் செய்தார். ஆனால், வைகோவின் மனு ஏற்கப்பட்டு அவர்து ராஜ்யசபா எம்பி ஆவது உறுதியாகி உள்ளது. 
 
மேலும், 4வது வேட்பாளராக களமிறங்கிய செய்த என்.ஆர்.இளங்கோ தனது மனு தாக்கல் வாபஸ் பெற உள்ளார். இது குறித்து வைகோ தெரிவித்தாவது, வைகோ போட்டியிட்டால் மட்டுமே சீட் என திமுக சொன்னதால் மதிமுகவுக்குள் அதிருப்தி என சொல்வதில் எந்த உண்மையும் இல்லை.
மதிமுகவில் பதவி பெற்றவர்கள்தான் கட்சியை விட்டு சென்றார்கள். கொள்கைக்காக வந்தவர்கள் கட்சியிலேயே இருக்கிறார்கள். அதேபோல் நான் போட்டியிடுவதால் கட்சிக்குள் யாரும் அதிருப்தியில் இல்லை. 
 
மத்திய அமைச்சர் பதை இரு முறை வந்த போதும் அதை ஏற்க நான் மருத்தேன். என் குடும்பத்தில் இருந்து யாரும் பதவிக்கு வரமாட்டார்கள். மதிமுகவின் தொண்டர்களுக்காகவே நான் வாழ்கிறேன் என தெரிவித்துள்ளார்.