வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By கே.என்.வடிவேல்
Last Updated : திங்கள், 28 மார்ச் 2016 (04:45 IST)

வைகோ விவகாரம் - நடந்தது என்ன?

வைகோ விவகாரம் - நடந்தது என்ன?

பாலிமர் செய்திதொலைக்காட்சிக்கு வைகோ பேட்டி அளித்தார் அப்போது அவர் பாதியிலே தனது பேட்டியை மிகவும் கோபமாக முடித்துக் கொண்டார். இது குறித்து பாலிமர் டிவி விளக்கம் அளித்துள்ளது.
 

 
இதுகுறித்து, பாலிமர் டிவியின் நெறியாளர் கண்ணன் அளித்துள்ள விளக்கத்தில் கூறியுள்ளாதாவது:-
 
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ-வுடன் ஒரு மணி நேர நேர்காணலுக்கு ஏற்பாடு செய்யப்படிருந்தது. ஆனால் 15 நிமிடங்களோடு நேர்காணலை நிறைவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. காரணம் நீங்கள் அறிந்தது. பாலிமர் தொலைக்காட்சி விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டே செயல்படுகிறது. அனைத்து தலைவர்களையும் சமமாக நடத்துகிறது.
 
குறிப்பாக, வைகோ மீது நான் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். நான் மதிக்கின்ற தலைவர்களில் அவரும் ஒருவர்.  வைகோ அவர்களை களங்கப்படுத்த வேண்டும் என்பதல்ல எனது நோக்கம். எனது கேள்வியை முழுமையாக கேட்பதற்கு முன்னதாகவே அவர் கோபப்பட்டு எழுந்தது துரதிஷ்டவசமானது.
 
சமூக வலைத்தளங்களையும் பத்திரிகைகளையும் மேற்கோள் காட்டி அவர் ஒரு குற்றசாட்டை முன் வைக்கும் போது அதே சமூக வலைத்தளங்களில் வைகோ மீது வந்த குற்றச்சாட்டுக்களை அவரிடம் எடுத்து சொல்லும் நோக்கிலேயே நான் கேள்விகளை முன் வைத்தேன்.  வைகோ பணம் பெற்றுவிட்டதாக நான் குற்றசாட்டை முன் வைக்கவில்லை.
 
சமூக வலைத்தளங்களில் உங்கள் மீதும் ஒரு குற்றசாட்டு இருக்கிறதே அப்படி இருக்கும்போது சமூக வளைத்தளங்களில் சொல்லப்படும் கருத்துக்கள் எந்த அளவிற்கு நம்பகத்தன்மை கொண்டதாக இருக்க முடியும் என்பது தான் எனது கேள்வியாக இருந்தது. இந்தக் கேள்வி முற்றுப்பெறுவதற்கு முன்பாகவே வைகோ அவர்கள் எழுந்து சென்றுவிட்டார். இது தான் நடந்தது.
 
மக்கள் மத்தியில் பேசப்படுகின்ற விசயங்களை தொகுத்து சம்பந்தபட்ட வர்களிடம் கேள்விகளை முன் வைக்கிறோம். ஒரு ஊடகவியலாலனாக நானும் அதைத்தான் செய்தேன் என விளக்கம் கொடுத்துள்ளார்.