நடராஜனுக்கு நான் நன்றியுள்ளவன்: வைகோ


Abimukatheesh| Last Updated: வெள்ளி, 6 ஜனவரி 2017 (14:11 IST)
சென்னையில் நடைப்பெற்ற கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் எழுதிய வெளியீட்டு விழாவில், நான் நடராஜனை நன்றியோடு நினைத்துப் பார்க்கின்றேன் என்று பேசினார். 

 

 
கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் எழுதிய 'தம்பி ஜெயந்த்துக்கு...' என்ற நுாலின் இரண்டாம் பாகம் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் வைகோ, நடராஜன் மற்றும் பழ.நெடுமாறனும் ஆகியோர் கலந்துக்கொண்டனர். வைகோ நுாலை வெளியிட அதை நடராஜன் பெற்றுக்கொண்டார்.
 
இதையடுத்து வைகோ பேசுகையில் கூறியதாவது:-
 
தமிழரின் சுவடுகளே இல்லாமல் இந்திய அரசு ஈழத்தை அழித்ததே, எந்த புலிக்கொடி  தஞ்சையில்  பறந்ததோ, அதே தஞ்சையில்  முள்ளிவாய்க்கால் நினைவு சின்னத்தை அமைப்பதற்கு பழ.நெடுமாறனோடு துணை நின்று இடமும் கொடுத்தவர் நடராஜன். அதை நான் நன்றியோடு நினைத்துப் பார்க்கின்றேன், என்றார்.
 
மேலும் நடராஜன் இந்தி எதிர்ப்பு போரட்டத்தில் மாணவன் தலைவனாக பங்காற்றியது குறித்தும் பேசினார். வைகோவும், நடராஜனும் நண்பர்கள் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. வைகோ மக்கள் நலக் கூட்டனியில் இருந்து வெளியே வந்தது, அதிமுகவுடன் கூட்டணி வைத்துக்கொள்ள தான் என்று அனைவராலும் பரபரப்பாக பேசப்பட்டது. அதற்கு முக்கிய காரணம் நடராஜன் அவரது நண்பர் என்பதுதான்.
 


இதில் மேலும் படிக்கவும் :