செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 30 மே 2023 (11:21 IST)

புதிய நாடாளுமன்றத்தில் உம்மிடி அனில் குமார் குடும்பத்தினர்! – பிரதமர் மோடிக்கு நன்றி!

Ummidi
புதிய நாடாளுமன்ற கட்டடத்திறப்பு விழாவின்போது பிரதமர் தங்கள் குடும்பத்தினருக்கு அளித்த கவுரவம் நெகிழ்ச்சி அடைய செய்ததாக உம்மிடி அனில் குமார் தெரிவித்துள்ளார்
 



சுதந்திரத்தின் சின்னமான செங்கோலை உருவாக்கிய உம்மிடி பங்காரு குடும்பத்தினருக்கு பிரதமரின் இல்லத்தில் மரியாதை அளிக்கப்பட்டது.

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் மக்களவை சபாநாயகர் இருக்கையின் அருகே வைக்கப்பட்டுள்ள செங்கோலை உருவாக்கிய  உம்மிடி பங்காரு செட்டி குடும்பத்தினரை  பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார்.

உம்மிடி பங்காரு செட்டி குடும்பத்தின் முக்கிய உறுப்பினரான உம்மிடி அனில் குமார் பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற சுதந்திரத்தின்  சின்னமான "செங்கோல்" ஐ மையமாகக் கொண்ட பெருமைக்குரிய விழாவில் கலந்துகொண்டு மிகுந்த மகிழ்ச்சியுடனும் மரியாதையுடனும் திரும்பியுள்ளார்.
இந்த விழா செங்கோலின் வரலாற்று முக்கியத்துவத்தை அங்கீகரிப்பது மட்டுமல்லாமல், இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் அதன் மதிப்பையும் வலியுறுத்துகிறது.

1947 ஆம் ஆண்டு ஆதீனங்களுக்கு செங்கோல் வழங்கிய  இடமான  பழமையான  வளாகமான பாரிமுனையில் உள்ள உம்மிடி துவாரக்நாத் ஜூவல்லர்ஸ்  இருந்ததைக் குறிப்பிட்ட உம்மிடி அனில் குமார்,    செங்கோலின் பாரம்பரியம் தொடங்கிய இடத்தைப் பாதுகாத்து கௌரவிப்பதில்  தானும் தன் குடும்பத்தினரும் பெரும் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார்.

1947 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அசல் செங்கோல் குறித்து ஆய்வில்  ஈடுபட்ட குடும்ப உறுப்பினர்களின் முக்கிய பங்களிப்பை மனதார பாராட்டினார்.  அவர்களின் விடாமுயற்சி மற்றும் நுணுக்கமான ஆராய்ச்சி இந்த வரலாற்று கலைப்பொருளை அங்கீகரிப்பதிலும் கொண்டாடுவதிலும் உச்சத்தை எட்டியுள்ளது என்றும் இது உம்மிடி குடும்பத்தினருக்கும் தேசத்திற்கும் மகத்தான கலாச்சார மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது என்று  உம்மிடி அனில் குமாரின் மகன்  அனிருத்தா உம்மிடி மேற்கோள் காட்டினார்.

நீதி மற்றும் நிர்வாகத்தின் சக்திவாய்ந்த பிரதிநிதித்துவமாக கருதப்படும் செங்கோல் தேசத்திற்கான அடையாள பொக்கிஷம்.

உம்மிடி அனில் குமார்  உம்மிடி பங்காரு செட்டி குடும்பத்தினருக்கு இந்த சிறப்பு மரியாதையை வழங்கியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தார்.  உம்மிடி அனில் குமாரின் மகன்களான அனிருத்தா உம்மிடி மற்றும்  பிரத்யும்ன உம்மிடி ஆகியோர் தங்கள் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும் இந்த  வளாகத்திலிருந்து வணிகத்தைத் தொடர்வதில் மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அடைகின்றனர்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் அணில்குமார் உம்மிடியின் மனைவி உம்மிடி அபர்ணா லக்ஷ்மி, மகன்கள் அனிருத்தா உம்மிடி மற்றும்  பிரத்யும்ன உம்மிடி ஆகியோர் உடனிருந்தனர்