திங்கள், 7 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 7 அக்டோபர் 2024 (14:56 IST)

உதயநிதி டீ-சர்ட் போடக்கூடாது! மீறினால் நாங்கள் வழக்கு போடுவோம்! - ஜெயக்குமார் எச்சரிக்கை!

Jeyakumar

அரசு விழாக்களுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் டீ-சர்ட் அணிந்து செல்வது மரபுக்கு எதிரானது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

 

 

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் “துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அரசு விழாக்களுக்கு சட்டை அணியாமல் டி-சர்ட் அணிந்து அதில் கட்சி சின்னத்தை பதிவு செய்து வருகிறார். அவரிடம் சட்டை இல்லையா? இல்லை என்றால் நாங்கள் வாங்கி தருகிறோம்.

 

டி-சர்ட்டில் கட்சி சின்னத்தை பொறித்துக் கொண்டு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பது ஏற்புடையது அல்ல. உங்கள் கட்சி நிகழ்ச்சிக்கு நீங்கள் எப்படி வேண்டுமானாலும் செல்லலாம். அதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.
 

 

அரசு ஊழியர்கள் கண்ணியமாக உடை அணிய வேண்டும் என 2019ல் அரசு உத்தரவு போடப்பட்டுள்ளது. அதன்படி ஆண்கள் சட்டை, ஃபார்மல் பேண்ட் அல்லது வேட்டி என தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் ஆடை அணிய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

 

வீட்டில் நடைப்பயிற்சி செல்லும்போது அணிவதுதான் டி-சர்ட். அதை அரசு நிகழ்ச்சிக்கு போட்டு செல்வது உதயநிதி மட்டும்தான். கண்ணியம் என்ற ஒன்று இருக்கிறது. தொடர்ந்து உதயநிதி அரசு விழாக்களுக்கு டி-சர்ட் அணிந்து சென்றால் அதிமுக நீதிமன்றத்தில் வழக்கு தொடரும்” எனக் கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K