புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : செவ்வாய், 14 ஏப்ரல் 2020 (14:28 IST)

நடிகர் உதய நிதி ஸ்டாலின் ரூ.1 லட்சம் நிதி உதவி !

தமிழகத்தில் கொரொனா பாதிப்பைத் தடுக்கும் பொருட்டு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில், வரும் 30 ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி நேற்று அறிவித்திருந்தார். இன்று காலை பிரதமர் மோடி, வரும் மே மாதம் 3 ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கபடும் என தெரிவித்துள்ளார்.

இதனால், பல கோடி ஏழை எளிய மக்கள், பல்வேறு தொழிலாளர்கள் மற்றும் சினிமா நடிகர் சங்கத்தினர் வறுமையில் உழலும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காகப் பல நிறுவனங்கள், நடிகர்கள்,அறக்கட்டளைகள் மக்களுக்கு உதவி வருகின்றனர்.

இந்த நிலையில், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சின்னத்திரை நடிகர்களுக்கு உதவும் வகையில் நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் சின்னத்திரை நடிகர் சங்கத்திற்கு ரு. 1 லட்சம் நிதியுதவி செய்துள்ளார்.