அதிவேகத்தில் வந்த இருசக்கர வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்து! – மதுரையில் அதிர்ச்சி!
மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்களை பின்தொடர்ந்து சென்று முந்த முயன்ற இளைஞர்கள் விபத்துக்குள்ளான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மதுரை- நத்தம் பறக்கும் மேம்பாலம் திறக்கப்பட்டு தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் மேம்பாலத்தில் அதிகமாக பைக் ரேஸர்கள் அதிவேகத்தில் பைக்குகளை இயக்குவதால் மெதுவாக செல்லக்கூடிய பைக் வாகன ஓட்டிகளுக்கு கடும் அச்சுறுத்தறலாக இருந்து வருகிறது.
இதனால் நத்தம் மேம்பாலத்தில் வாகனங்கள் செல்வதற்கு அச்சமடைந்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பாக நத்தம் மேம்பாலத்தில் ஏற்பட்ட விபத்தில் பைக்குடன் பாலத்தில் இருந்து கீழே விழுந்து இரு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் ஏற்பட்டது.
அன்றிலிருந்தே ரோந்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையிலும் தொடர்ச்சியாக நாள்தோறும் பைக் ரேஸர்கள் மேம்பாலத்தில் மீது அதிவேகத்தில் செல்வதால் தொடர்ந்து விபத்துக்கள் அதிகரித்து வருகின்றது.
மேலும் மேம்பாலத்தில் அதிவேகத்தில் இரண்டு பெண்கள் பைக்குகளில் செல்ல அதனை பின்தொடர்ந்து சென்ற இரண்டு இளைஞர்கள் மற்றொரு பைக்கில் அதிவேகமாக செல்ல காரில் சென்ற வாகனஓட்டி ஒருவர் ஏதேச்சையாக வீடியோவாக பதிவு செய்த நிலையில் பதிவு செய்து கொண்டிருக்கும் போது இரண்டு பைக்குகளும் ஒன்றோடும் ஒன்று மோதி கீழே விழுந்து காயம் ஏற்பட்டு செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.
இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பதிவிடும் ரீல்ஸ்களுக்காக இதுபோன்று அதிவேகத்தில் சென்று அதனை வீடியோவாக பதிவு செய்து பதிவிடும் பைக் ரேசர்களால் தொடர்ந்து சாலை விபத்து அதிகரிப்பதோடு மெதுவாக செல்லும் வாகன ஓட்டிகளையும் அச்சுறுத்தும் நிலை ஏற்பட்டு வருவதால் இது போன்ற பைக் ரேஸர்களின் ரீல்ஸ்கள் குறித்து காவல்துறை கண்காணித்து நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது
Updated by Prasanth.K