Daily Horoscope
✕

நிர்மலா தேவி மீது மேலும் இரண்டு மாணவிகள் புகார்

Updated: புதன், 25 ஏப்ரல் 2018 (10:19 IST)
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயற்சித்த பேராசிரியர் நிர்மலாதேவி மீது மேலும் இரண்டு மாணவிகள் புகார் அளித்துள்ளனர்.
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயற்சித்த அருப்புக்கோட்டை கல்லூரி ஒன்றின் கணித பேராசிரியை நிர்மலாதேவி வழக்கை கவர்னர் நியமனம் செய்த சந்தானம் தலைமையிலான குழுவும், சிபிசிஐடியும் தனித்தனியே விசாரணை செய்து வருகின்றனர். 
 
இந்த விவகாரத்தில் பேராசிரியை நிர்மலாதேவிக்க்கு துணை பேராசிரியர் முருகன் என்பவரும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி என்பவரும் உதவியதாக சிபிசிஐடி போலீசார் சந்தேகம் அடைந்தனர். இந்த நிலையில் மேற்கண்ட இருவரும் திடீரென தலைமறைவானதால் போலீசாரின் சந்தேகம் உறுதியானது. அதில், முருகன் மட்டும் போலீசாரிடம் சிக்கியுள்ளார்.
நிர்மலா தேவியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி போலீசார், அருப்புக்கோட்டையில் உள்ள அவரின் வீட்டிற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.  வீட்டிற்குள் இருந்த முக்கிய ஆவணங்கள், கணிப்பொறி, பென் டிரைவ் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதேபோல், அவரது காரிலும் அவர்கள் சோதனை நடத்தினார்.
 
அப்போது, ஒரு ரகசிய டைரியை அவர்கள் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. அதில், அவருடன் தொடர்பில் இருந்த பல விவிஐபிக்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் தொலைப்பேசி எண்கள் இருந்தனவாம். 
 
இந்நிலையில் தேவாங்கர் கல்லூரியை சேர்ந்த இரண்டு மாணவிகள் பேராசிரியை நிர்மலா தேவி மீது புகார் அளித்துள்ளனர். புகாரை கவர்னர் நியமனம் செய்த சந்தானம் தலைமையிலான குழுவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

எல்லாம் காட்டு

கனமழை எச்சரிக்கை: நாளை எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? கல்வி அமைச்சர் தகவல்..

தனியார் நிறுவனங்களுக்கு முதல்வர் டி.கே.சிவகுமார் எச்சரிக்கை! கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பில் புறக்கணிப்பா?

இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் டுவோ தட்டுப்பாடு: பிளாக்கில் கூடுதல் ரூ.4 லட்சம் வரை விற்பனை..

வங்கக்கடலில் தீவிரவடையும் 'அர்னாப்' புயல்: 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. பள்ளிகள் நாளை விடுமுறை..

நீதிபதியின் 17 வயது மகன் ஓட்டிய மெர்சிடீஸ் கார் மோதி விபத்து.. வியாபாரி நீதிபதி மீது வழக்கு பதிவு செய்யப்படுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments